யாழில் மணல் கடத்தல்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு!

யாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகாரில் உழவு இயந்திரத்தின் ஊடாக மணல் கடத்தலில் ஈடுபட்டோரை பொலிஸார் இடைமறித்தப்போது, அவர்கள் நிறுத்தாமல் சென்றமையினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது உழவு இயந்திரம் தடம்புரண்ட நிலையில் அதில் பயணித்த சந்தேகநபர்கள் மூவரும் தப்பித்து சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் தப்பிச் சென்றுள்ளோரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

மேலும் மணல் கடத்தல்காரர்களினால் கைவிடப்பட்ட மணல் ஏற்றிய பெட்டியுடன் உழவு இயந்திரம், பக்க இயந்திரம் ஆகியன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.