முல்லைத்தீவு பகுதிக்கும் பரவியது “டெல்டா”

இலங்கையில் அண்மைய நாட்களாக டெல்டா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் தமிழர் பகுதிகளான வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதியிலும் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோன்று கோட்டே, கொலன்னாவ, அங்கொட, நவகமுவ, இரத்மலானை, மஹாபாககே, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, பேருவளை காலி, மாத்தறை,மற்றும் தம்புள்ளை, ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இலங்கையில் இதுவரை 61 கொவிட் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.