இருளில் மூழ்கிய பிரித்தானிய நகரம்!

பெருவெள்ளம் சூழ்ந்த நிலையில் பிரித்தானியாவின் லிவர்பூல் நகரம் இருளில் மூழ்கியதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பெருவெள்ளம் காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டு, போக்குவரத்து கடுமையாக பாதிப்புக்கு உள்ளானது. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க இரவு 10.30 மணியளவில் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் உடனடியாக குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, குறிப்பிட்ட பகுதியை பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.

பெருவெள்ளம் காரணமாக பல குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி சாலைகளும் மூடப்பட்டுள்ளது.

இதனிடையே, நள்ளிரவு 1 மணி முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட, அப்பகுதியில் உள்ள ஆயிரக் கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகினர் என தெரிய வந்துள்ளது.

பலர் அவசர உதவிக்குழுவினரை தொடர்பு கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Merseyside தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினரின் கூற்றுப்படி, அஞ்சல் இலக்கம் எல் 1, எல் 3, எல் 5, எல் 6, எல் 7 & எல் 9 பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிர்வாகிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.