அரிசியின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்!

அரிசியின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சந்தையில் அரிசியின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் எதிர்வரும் வாரம் முதல் அரிசி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மூன்றாண்டு காலப் பகுதிக்கு ஒரு கிலோ அரிசியை நூறு ரூபாவிலும் குறைவாக பெற்றுக் கொள்ளக்கூடிய வழிகள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரிசி விலை குறைப்பு குறித்த யோசனைத் திட்டம் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசிக்கான அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்து வர்த்தமானியில் அது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.