உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹிசாலினி? தோண்ட தோண்ட வெளிவரும் பகீர் தகவல்கள்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த ஹிஷாலினி மறுநாளே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்து மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயதாக டயகம பகுதியினை சேர்ந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் குறித்து விசாரிக்கும் பொலிஸ் குழுவினர், இன்று பிற்பகல் ரிசாத் பதியுதீனின் வீட்டை ஆய்வு செய்துள்ளனர்.

இதன்போது அங்கிருந்து விசாரணை அதிகாரிகள் ஒரு லீட்டர் போத்தலில் மண்ணெண்ணெய் கொண்டு வந்திருப்பதையும் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணையை நடத்திய மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், சிறுமி தன்னை் தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு நிராகரிக்கப்படும் என்று கூறியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை,நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான சிறுமி தற்கொலை செய்துகொண்டமைக்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரண தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணிக்காக அழைத்து வரப்பட்ட மலையக பெண்கள் 11 பேர் கடுமையான சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என திவயின ஊடகம் செய்தி வெளியிட்டிருந்ததுடன்,அவர்களில் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.