மிகவும் அபாயமிக்க பகுதியாக அடையாளம் காணப்பட்ட 10 மாவட்டங்கள்!

இலங்கையின் 10 மாவட்டங்கள் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளன.

மேலும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

பருவப்பெயர்ச்சி மழையுடன் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவற்றில் மேல் மாகாணத்திலேயே பெருமளவானோர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.