கார் விபத்தில் சிக்கிய பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் படுகாயம் தோழி ஒருவர் சம்பஇடத்திலே பலி!

துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் யாஷிகா ஆனந்த், தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார்.

மேலும் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளான பிக்பாஸ், முரட்டு சிங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டார்.

இந்நிலையில் மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார்.

Advertisement

மேலும் அவரின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரண்டு நண்பர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.