யாழில் காணாமல் போன தமிழ் யுவதி!

யாழில் வசித்து வந்த யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்.தெல்லிப்பளையில் பொலிஜ் பிரிவில் வசித்து வந்த யுவதியொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கட்டுவன் மேற்கு, தெல்லிப்பளை அய்யனார் கோவிலடி பகுதியில் வசித்து வரும் செல்வராசா கீர்த்தனா (27) என்பவர் நேற்று (25) மாலை 4.30 மணியளவில் வீட்டில் இருந்து துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

மேலும், மனநிலை பாதிக்கப்பட்ட இவர் ரோஸ் நிற பஞ்சாபி அணிந்திருந்தார். இவரை எங்கு கண்டாலும் உடனடியாக கீழுள்ள தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளவும். 0762896596, 0765874880, 0763156488

Previous articleஇஷாலினியின் உடலை தோண்டியெடுக்க உத்தரவு?
Next articleமுல்லைத்தீவில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!