ஜீன்ஸ் அணிந்ததால் 17 வயது மகளை அடித்து கொன்ற குடும்பத்தினர்!

ஜீன்ஸ் அணிந்ததால் 17 வயதான பெண்ணொருவர் அவரது குடும்பத்தினராலேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் நடந்தது.நேஹா பாஸ்வான் என்ற 17 வயது பெண் கொல்லப்பட்டார்.

நேஹா ஜீன்ஸ் அணிவதை விரும்பாத தாத்தா மற்றும் மாமாக்கள் தடிகளால் அவரை தாக்கியுள்ளனர்.

மேலும் நேபாள எல்லைக்கு அருகிலுள்ள தியோரியா மாவட்டத்தில் சாவ்ரேஜி கார்க் கிராமத்தில் நேஹா வசிக்கிறார். அவர் ஜீன்ஸ் அணிவதை விரும்புகிறார். எனினும், அவரது குடும்பத்தினர் அதை விரும்பவில்லை.

அத்தோடு அவரது தாயார் சகுந்தலா தேவி பாஸ்வான், ஒரு மத சடங்கு செய்யும் போது நேஹா வீட்டில் ஜீன்ஸ் அணிந்திருந்ததை தொடர்ந்து சச்ரவு தொடங்கியதாக கூறினார்.

ஜீன்ஸ், ரொப்பை கழற்றி, பாரம்பரிய ஆடை அணிந்தபடி சடங்கில் ஈடுபடும்படி தாத்தா, பாட்டி கூறிய போது, நேஹா மறுத்தார். இதையடுத்து அவர் தாக்கப்பட்டார்.மேலும் இந்த தாக்குதலில் ஈடுபடாத மற்ற குடும்ப உறுப்பினர்கள், ஒரு ரிக்‌ஷாவை அழைத்து, மயக்கமடைந்த நேஹாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.

இருப்பினும், ரிக்‌ஷாவின் டிரைவர் நேஹாவின் உடலை மறைக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஒரு நாள் கழித்து குடும்பத்தினர் நேஹாவின் உடலைக் கண்டுபிடித்தனர்.

நேஹாவின் தாயார், மாவட்ட மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அங்கு நேஹா இருக்கவில்லை.

மேலும் இதன் பின்னர், கந்தக் ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் நேஹா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

அத்தொடு நேஹாவின் குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் மீது- நேஹாவின் தாத்தா, பாட்டி, மாமாக்கள், உறவினர்கள் மற்றும் ரிக்‌ஷா டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது