சீனாவில் மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்!

சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுதும் பரவி உயிர்களை வேட்டையாடி வருகின்றது.

தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அறிவிக்கப்பட்டாலும், மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், சீனாவில் உள்ள ஐந்து மாகாணங்களில் தற்போது கொரோனா மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.

பல மாதங்களில் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 20ஆம் திகதி நாஞ்சிங் விமான நிலையத்தில் ஒன்பது பேருக்கு புதிய டெல்டா வகை கொரோனா கண்டறியப்பட்டது.

இதையடுத்து, நகரில் மொத்தமாக 184 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்துபட்சம் 206 பேர் நாஞ்சிங் விமான நிலையத்திலிருந்து பரவிய டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தடுப்பு நடவடிக்கையாக ஜியாங்சு மாகாணத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.