யாழில் விபத்தில் உயிரிழந்தவருக்கு கொரோனா!

யாழில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் திடீர் என தடுமாறி வீதியோரம் வீழ்ந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உள்ளமை பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் சுதுமலை மற்றும் உரும்பிராயை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடையவரே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மற்றும் போதனா வைத்தியசாலையில் உறவினர் ஒருவரை பார்வையிட்டு நேற்று மதியம் 1.45 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது யாழ்ப்பாணம் சிவலிங்கப் புலியடியச் சந்தியில் பயணித்த போது, அவர் திடீரென வீதியில் மோட்டார் சைக்கிளில் சரிந்து வீதியோரத்தில் வீழ்ந்துள்ளார். இதனையடுத்து அவரை அந்தப் பகுதியைச் சேர்ந்தோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அவருக்கு உடனடியாக முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை கண்டறியப்பட்டநிலையில் அவர் இன்று அதிகாலை 1.25 மணியளவில் உயிரிழதுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

Previous articleதனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ்- டிக்வெல்லவுக்கு ஓராண்டு தடை: 10 மில்லியன் ரூபாய் அபராதம்
Next articleஆசிரியை ஒருவரின் வண்டவாளத்தை அம்பலமாக்கிய சுவிஸ் நபர்