கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் சற்று முன்னர் அதிரடியாக கைது!

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேரை சற்று முன்னர் பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதன் காரணமாக காலிமுகத்திடலில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

காலிமுகத்திடத்திற்கு முன்னாலுள்ள ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் – அதிபர் சங்கத்தினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 26 பேரும், பெண்கள் 16 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவேண்டாம் என பொலிஸார் அறிவித்திருந்தனர்.

எனினும், குறித்த அறிவித்தலை பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில், அவர்களை கைது செய்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில், அத்துடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் வருகைதந்த 10 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர்களை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.