பிரித்தானியாவில் 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்!

16 மற்றும் 17 வயதுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என பிரித்தானிய நிபுணர்கள் பரிந்துரைக்கவுள்ளனர்.

நன்மைகள் மற்றும் அபாயம் குறித்து மதிப்பிடுவதாகக் கூறி, தடுப்பூசி மற்றும் நோய்த் தடுப்புக்கான குழு கடந்த மாதம் இந்த நடவடிக்கையை இடைநிறுத்தியிருந்தது.

இந்நிலையில் புதிய நடவடிக்கையில் சுமார் 1.4 மில்லியன் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள் ஆனால் தடுப்பூசி நடவடிக்கை எப்போது தொடங்கும் என அறிவிப்பு வெளியாகவில்லை.

சுகாதார நிலை குறைவான அல்லது அதிக ஆபத்து இருக்கும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இப்போது பிரித்தானியாவில் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.

ஆனால் அமெரிக்கா, கனடா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகள் வழக்கமாக 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.

எனவே குறித்த நிபுணர்களின் ஆலோசனையை இங்கிலாந்தில் உள்ள அமைச்சர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.