லிட்ரோ நிறுவனத்தினால் 10 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் இறக்குமதி!

லிட்ரோ நிறுவனம் 10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தமது உற்பத்தியை பகிரும் செயற்பாட்டை நிறுத்தியுள்ள நிலையில் நுகர்வோருக்கு தேவையான எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பகிர்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் கடந்த 7 மாதங்களில் புதிய எரிவாயு கொள்கலன்கள் எவையும் நாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியானமையை அடுத்து நேற்றைய தினம் ஒரு இலட்சத்துக்கும் அதிக எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.