தமிழக்தின் ஒரு பிரதேசத்தில் நான்கரை ஆண்டில் இவ்வளவு கற்பழிப்பு வழக்கா?

மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ள கற்பழிப்பு வழக்குகள் தொடர்பாக சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜித்து பட்வாரி கேள்வி எழுப்பினார்.

அதற்கு உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார் அதில் ‘‘கடந்த நான்கரை ஆண்டுகளில் (2017 ஜனவரி முதல் 2021 ஜூன் மாதம் வரை) 26,708 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் கற்பழிக்குப்பின் கொலை செய்யப்பட்டதாக 37 வழக்குகள் பதிவாகியுள்ளன. சிறுமிகளை கடத்தியதாக 27,827 வழக்குகள் பதிவாகியுள்ளன.

2020-ல் 633 பெண்கள் கொலைத் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017-ல் 549 வழக்குகளும், 2018-ல் 583 வழக்குகளும், 2019-ல் 577 வழக்குகளும், ஜனவரி 2021-ல் இருந்து ஜூன் 30-ந்தேதி வரை 321 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ எனத் தெரிவித்துள்ளார்.