பிரான்சில் அமுலுக்கு வந்த வைரஸ் பாஸ்!

பிரான்சில் இனி ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்ய ‘வைரஸ் பாஸ்’ கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் நீண்ட தூர ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்ய விரும்பும் அனைவரும் QR குறியீடு மூலம் கோவிட் தடுப்பூசி சான்றை காட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் , உணவகங்கள் மற்றும் காஃபி ஷாப்களிலும் உயிரை சான்றை காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர். டெல்டா வகை கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியாக இந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பிரான்ஸ் அரசின் இந்த நடவடிக்கை, அதிக எண்ணிக்கையிலான மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள தூண்டும் ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஒருவர் இந்த பாஸை (Virus Pass) பெறுவதற்கு, அவர்கள் கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் அல்லது சமீபத்தில் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டதற்கான ஆதாரம் அல்லது சமீபத்தில் சோதனை செய்து அதில் எதிர்மறை முடிவு கிடைத்த ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்சின் மக்கள்தொகையில் இப்போது 54% மக்களுக்கு (36 மில்லியன்) கொரோனா வைரசுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous articleசுவிட்சர்லாந்தில் 12 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு, மொடர்னா தடுப்பூசி!
Next articleநாட்டில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கோவிட் மரணங்கள்!