படுத்த படுக்கையாக கிடக்கும் யாஷிகா – கண்கலங்கும் புகைப்படம் – சோகத்தில் ரசிகர்கள்!

நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் இடது காலில் பெரிய கட்டுடன் உள்ளார். மேலும், கைகளில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு வருகிறது. பிபி, பல்ஸ் போன்றவற்றை கண்காணிக்கும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சையில் பெட்டில் படுத்த படுக்கையாக கிடக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த். யாஷிகாவின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Advertisement

மேலும் பலர் யாஷிகாவின் நிலையை கண்டு கண்ணீர் விடுத்து வருகின்றனர். மேலும் போட்டோவை பார்த்த பலரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளனர். யாஷிகாவின் இந்த போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.