நடிகர் பிரகாஷ் ராஜ் வைத்தியசாலையில் அனுமதி!

நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’, பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ’திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், பிரகாஷ் ராஜ் வீட்டில் இருக்கும்போது சறுக்கி விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பிரகாஷ் ராஜுக்கு, கையின் தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

இதனால், அறுவை சிகிச்சைக்காக சென்னையில் இருந்து ஐதராபாத் சென்றிருக்கிறார். இதனை, பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

Advertisement