யாழ்.ஆணைக்கோட்டை – முள்ளியில் வாள்களுடன் இரு ரவுடிகள் கைது!

யாழ்.ஆணைக்கோட்டை – முள்ளி பகுதியில் வாள்கள் மற்றும் கோடாரிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

குறித்த கைது சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் முள்ளி பகுதியை சேர்ந்த 23வயது. 24 வயதான இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் கஜேந்திரா வாள் கோடாரி என்பன கைப்பற்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

Previous articleயாழ்.பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் கொரோனாவுக்கு பலி!
Next articleகோவிட் தொற்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 16 ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரை