வவுனியா இ.போ.ச சாரதி ஒருவருக்கு கொரோனா!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் கடமையாற்றும் சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த சாரதிக்கு சுகாதாரபிரிவினரால் இன்றையதினம் அன்ரியன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

இதேவேளை வவுனியா சாலையில் பணிபுரியும் ஏனைய ஊழியர்களிற்கு நாளையதினம் காலை பிசிஆர் பரிசோதனை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleலண்டனில் மகளை கேலி செய்த கும்பலை தட்டிக்கேட்ட தந்தை கத்தி குத்துக்கு இலக்காகி மரணம்!
Next articleவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை!