வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கோவிட் தொற்று!

வவுனியா நேரியகுளம் பகுதியில் கோவிட் தொற்றினால் வயதான பெண்மணி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த பெண் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இரு தினங்களிற்கு முன்பாக வீட்டில் மரணமடைந்துள்ளார்.

அவரது சடலம் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது.

Advertisement

அதன் முடிவுகளின் பிரகாரம் பெண்ணுக்கு கோவிட் தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அவருடன் நேற்றையதினம் வவுனியாவில் இரண்டு பெண்கள் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.