பிரான்ஸில் கொடூரமாக கொல்லப்பட்ட தாய் மற்றும் மகள் யாழை சேர்ந்தவர்கள்!

பிரான்ஸில் கொடூரமாக கொல்லப்பட்ட தாய் மற்றும் மகள் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்தவர்கள் என கூறப்படுகின்றது.

பிரான்ஸ் பாரிஸ் புறநகர் பகுதியான வல- துவாஸ் (Val-d’Oise) மாவட்டத்திலுள்ள சான்-உவான் லுமூன் ( Saint-Ouen-l’Aumône) பகுதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

சம்பவத்தில் 52 வயதான தாய் மற்றும் 21 வயதான மகளுமே சடலங்களாக மீட்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த குடும்பத்தினர் கடந்த இரண்டு வருடங்களாக அங்கு வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

எனினும் இந்த கொடூர கொலை சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை பிரான்ஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.

Previous articleகொரோனா சரீரங்களை தகனம் செய்ய பணம் அறவிட வேண்டாம்!
Next articleவவுனியாவில் சலூன் மற்றும் பெண்கள் அழகு நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை!!