வவுனியாவில் சலூன் மற்றும் பெண்கள் அழகு நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை!!

வவுனியா நகரிலுள்ள சலூன் மற்றும் பெண்கள் அழகு நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அழகு நிலையங்களில் முகச்சவரம் மற்றும் முகப்பராமரிப்பு ,

அழகுபடுத்தல் போன்ற செயற்பாடுகளின் போது முகக்கவசம் அணியாமையினால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து வவுனியா சுகாதார பிரிவினரினால் திடீர் விஜயம் முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள இரண்டு சலூன் மற்றும் மூன்று பெண்கள் அழகு நிலையம் என்பனவற்றிக்கு சென்ற சுகாதார பிரிவினர் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் குறித்த நேரத்தில் நின்ற வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கு பி.சி.ஆர் பரிசோதனையினை முன்னெடுத்திருந்தனர்.