முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொரோனா

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின்போது அவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடன் தொடர்பை பேணிய அனைவரையும் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.

இதற்கமைய, அவரின் பணிக்குழாமினரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.