நடிகர் காளிதாஸ் காலமானார்!

நடிகரும் பின்னணிக் குரல் கலைஞருமான வி. காளிதாஸ் காலமானார்.

திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துப் புகழ் பெற்ற வி. காளிதாஸ், திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். பல வில்லன்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்து கவனம் பெற்றார்.

இந்நிலையில் வி. காளிதாஸ் இன்று காலமானார். நடிகர் சங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.

Advertisement

இனிமேல் இக்குரலைக் கேட்க முடியாது. தனது குரலால் வில்லன் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவர் காலமானார் என்று நடிகர் மோகன் ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.