ஆட்சியைக் கலைக்க தயாராகும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

ஆட்சிக்காலம் நிறைவடைய இரண்டு வருடம் மீதமுள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆழ்சியை கலைக்க தயாராகி வருவதாக பரப்ரப்பு தகவலொன்று வெளியாகியுள்ளது.

கனடாவில் லிபரல் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ (JustinTrudeau) பிரதமராக இருந்து வருகிறார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்த ஜஸ்டின் ட்ரூடோ (JustinTrudeau), 2019 தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டாலும் பெரும்பான்மையைப் பெற இயலவில்லை.

இதனால் முக்கியமான சட்டங்களையெல்லாம் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடனே நிறைவேற்றும் நிலை நீடித்து வந்தது. இந்தச் சூழலில் அண்மையில் நாடாளுமன்றத்தில் விஷமத்தன்மையும், இடையூறும் அதிகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகளை விமர்சித்தார்.

இதன்தொடர்ச்சியாக தற்போது, பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியமைப்பதற்காக முன்கூட்டியே தேர்தலை நடத்த ஜஸ்டின் ட்ரூடோ (JustinTrudeau) முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ (JustinTrudeau), வரும் ஞாயிற்றுக் கிழமை கவர்னர் ஜெனெரலை சந்தித்து ஆட்சியைக் கலைக்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் , தேர்தல் திகதியாக செப்டம்பர் 20 ஆம் திகதியை அறிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதேவேளை தனது ஆட்சிக்காலம் நிறைவடைய இரண்டு வருடம் மீதமுள்ள நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ (JustinTrudeau) இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.