வவுனியா வைத்தியசாலையிலும் ஒட்சிசன் தேவையுடையோர் அதிகரிப்பு – எச்சரிக்கை பதிவு

நாட்டில் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படகூடிய தருணத்தில் வவுனியா வைத்தியசாலையிலும் ஒட்சிசன் தேவையுடையோர் அதிகரித்து வருகின்றனர் என்று வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலைநாதன் ராகுலன் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் நாட்டில் கொரொனா மரணங்களும் தொற்றாளர்களும் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் நாளுக்கு நாள் கொரனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் முதலாவது கொரொனா தொற்றாளர் விடுதி அண்மையில் நோயாளர்களால் நிரம்பியமையால் இரண்டாவது நோயாளர் விடுதியும் கொரனா நோயாளர்களுக்காக திறக்கப்பட்டது.

Advertisement