இன்றைய இராசிபலன்கள் (14.08.2021)

மேஷம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதி காரிகள் அதசிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.

மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

Advertisement

கடகம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினர் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர் கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். துணிவுடன் செயல்படும் நாள்.

கன்னி: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளை களின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத் தாருடன் இணக்கமாக செல்லவும். யாருக்கும் பணம் நகை வாங்கித்தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களால் விரயம் வரும். உத்தி யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நாள் இல்லை.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உடல் அசதி சோர்வு வந்து விலகும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

தனுசு: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரம் தழைக்கும். புது ஒப்பந்தம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத் துவம் தருவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

மகரம்: எதையும் தாங்கும் மனோபலம் கிடைக்கும். உடன்பிறந்த வர்கள் பாசமழை பொழிவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

கும்பம்: கணவன் – மனைவி நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாம லேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப் பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.