நிர்ணய விலைக்கு மேலதிகமாக அரிசி விற்பனை செய்தால் ஒரு கோடி ரூபா வரை தண்டப்பணம்

நிர்ணய விலைக்கு மேலதிகமாக அரிசி விற்பனை செய்தால் ஒரு கோடி ரூபா வரை தண்டப்பணம் விதிக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தள்ளார்.

அரசாங்கத்தின் நிர்ணய விலை 100 ரூபாவிற்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளிடம் அரிசி கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எக்காரணம் கொண்டும் 100 ரூபாய்க்கு அதிகம் அரிசி விற்பனை செய்ய இடமளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 100 ரூபாய்க்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க புதிய சட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

அது தொடர்பான வரைபு சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த சட்டத்தின் மூலம் 100 ரூபாய்க்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் நபருக்கு 2500 ரூபா முதலிலும் இரண்டாவது தடவை ஒரு லட்சம் ரூபாவும் மூன்றாவது தடவை இரண்டு லட்சம் ரூபாவும் இப்படியாக பத்து லட்சம் ரூபா வரை தண்டப்பணம் அறவிடப்படும், அரிசி உரிமையாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை தண்டம் அறவிடும் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தில் பின்னர் அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களிடம் இருக்கும் அரிசியை சந்தைக்கு விநியோகிக்காது இருந்தால் அதனை எவ்வாறு வெளியில் எடுப்பது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் அரிசி அதிக விலைக்கு விற்போரிடம் அரிசி கொள்வனவு செய்ய வேண்டாம் என அமைச்சர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.