கனேடிய எல்லையில் அதிகாரிகளிடம் சிக்கிய அபாயகரமான பொருள்!

கனேடிய எல்லையில் அதிகாரிகளிடம் சிக்கிய ஆபத்தான பொருளால் இளைஞர்களுக்கு ஏற்படவிருந்த பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கனடா எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனை ஒன்றில், 1,500 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட ரசாயனம் ஒன்று சிக்கியுள்ளது.

Fentanyl என்னும் போதைப்பொருளைத் தயாரிக்க பயன்படும் அந்த ரசாயனம், கிரிமினல்கள் கையில் சிக்கியிருந்தால் 2 பில்லியன் டோஸ் போதைப்பொருள் இளைஞர்களின் வாழ்வை சீரழித்திருக்கும் என கூறப்படுகின்றது.

Advertisement

கப்பல்களில் வரும் கண்டெய்னர்களை சோதனையிட்டுவந்த அதிகாரிகள், அவற்றில் ஒன்றில், வீட்டு உபயோகப் பொருட்களின் நடுவே 1,500 கிலோகிராம் எடையுள்ள 4-Piperidone என்னும் ரசாயனம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் , அந்த போதைப்பொருள் கனடாவின் தெருக்களுக்குள் நுழைந்து ஏராளம் இளைஞர்களின் வாழ்வை சீரழிக்க இருந்த பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.