லண்டனில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் சிறுமி படைத்த சாதனை!

லண்டனில் 10 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற, துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று, இன்னும் பல தமிழர்கள் மத்தியில் நீங்காமல் நினைவில் இருக்கிறது.

துஷா என்ற 5 வயது சிறுமி தனது மாமாவின் கடையில் துள்ளி விளையாடிக் கொண்டு இருந்த வேளை ஒரு குழுவுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அந்த குழுவில் இருந்த நபர் ஒருவர் துப்பாக்கியை பிரயோகித்துள்ளார்.

அப்போது தூப்பாக்கி குண்டு தவறுதலாக துஷா என்னும் சிறுமியின் பின் பகுதியில் பாய்ந்துள்ளது. அதில் உயிருக்கு போராடிய சிறுமியை இறுதியில் வைத்தியர்கள் காப்பாற்றியுள்ளனர்.

இந்நிலையில், இம்முறை இடம்பெற்ற O/L பரீட்சையில் துஷா பெரும் சாதனை படைத்துள்ளார் என்று ஆங்கிலப் பத்திரிகைகள் அவரைப் பாராட்டி உள்ளது.

இந்த ஈழச் சிறுமியின் சாதனை முழு பிரித்தானியாவும், ஒரு முறை தமிழர்களை திரும்பிப் பார்த்துள்ளது என்று தான் கூறவேண்டும். 9 பாடங்களில் அனைத்திற்கு 8 க்கு மேல் மதிப்பெண்களை அவர் எடுத்து சாதனை படைத்துள்ளார்,

Previous articleநண்பர்களுடன் குளிக்கச் சென்ற 3 சாதாரணதர வகுப்பு மாணவர்கள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக பலி!
Next articleகொரோனா தொற்றின் ஆபத்து தொடர்பில் பிரபல நடிகை விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை!!