கள்ளக்காதலை தட்டிக்கேட்ட அகதி முகாமைச் சேர்ந்த (இலங்கை) பெண் அடித்துக் கொலை!

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த (மனைவி)யை கட்டையால் அடித்துக் கொலை செய்து விட்டு எரித்து சாம்பலாக்கிய சம்பவம் தொடர்பாக கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சென்னை விருதுநகர் அருகே குல்லூர்சந்தையை சேர்ந்தவர் நாகமுத்து (வயது- 33), இவருக்கு நிர்மலா (வயது-30) என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

நிர்மலா இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் என்றும் நாகமுத்துக்கும் நிர்மலாவுக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நாகமுத்துக்கு வேறு சில பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்து உள்ளதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக நிர்மலா தனது இரண்டு குழந்தைகளுடன் கணவரை விட்டு பிரிந்து விருதுநகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக நாகமுத்து தனது மனைவியுடன் சமரசம் ஏற்பட்டு குல்லூர்சந்தையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

மீண்டும் தனது கணவர் வேறு பெண்களுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை அறிந்த நிர்மலா தனது கணவனிடம் அது குறித்து கேட்டு உள்ளார்,அப்போது கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. இந்த சண்டையில் நாகமுத்து மனைவியை கட்டையால் தாக்கி உள்ளார்.

கட்டையால் தாக்கப்பட்ட நிர்மலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மனைவியின் உடலை வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் வைத்து நாகமுத்து எரித்து உள்ளார்.

இதையடுத்து நிர்மலாவின் சாம்பலை குல்லூர்சந்தை அணைபகுதியில் தண்ணீர் கரைத்து உள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தனது சகோதரியை காணவில்லை என நிர்மலாவின் அண்ணன் நாகமுத்துவிடம் பலதடவைகள் தங்கை தொடர்பாக கேட்டுள்ளார்.

நாகமுத்து முறையாக பதில் சொல்லததால் சந்தேகம் அடைந்ந நிலையில் தனது சகோதரி நிர்மலாவை காணவில்லை உள்ள சூலக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் நாகமுத்துவை சூலக்கரை பொலிசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கள்ளகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனது மனைவியை அடித்து கொன்றதை ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அகதி முகாமைச் சேர்ந்த இலங்கை பெண் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.