முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தீவிர சிகிச்சைப் பிரிவில்!!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

கோவிட் நோய்த் தொற்று காரணமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் மங்கள சிகிச்சை பெற்று வருகின்றார்.

இரண்டு மாத்திரை கோவிட் தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மங்களவிற்கு கோவிட் நியூமோனியா ஏற்பட்டுள்ளதாகவும் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மங்களவின் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

கடந்த வாரம் மங்கள சமரவீரவிற்கு கோவிட் தொற்று உறுதியாகியிருந்தது.

கொழும்பின் தனியார் வைத்தியசாலையொன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மங்கள சமரவீர ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Previous articleஎதற்கும் தயாராக இருங்கள் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!
Next articleஇன்று மேலும் 2,428 பேருக்கு கொவிட்!