எழிலனின் கனவினை நனவாக்கிய அனந்தி சசிதரனின் மூன்று பெண் பிள்ளைகள்!

முன்னாள் விடுதலை புலி உறுப்பினரும் தமது கணவருமான எழிலனின் கனவை தமது பிள்ளைகள் நனவாக்கியுள்ளதாக அனந்தி சசிதரன் நெகிச்சியுடன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

2007/2008 என்கணவரின் விருப்பத்திற்கு அமைய எங்கள் பிள்ளைகளிற்கு கிளிநொச்சியில் இருந்த தமிழீழ விளையாட்டு கழகத்தினரல் நடாத்தப்பட்ட கராத்தே பயிற்சியை வழங்கியிருந்தேன்.

போரிற்கு பிற்பட்ட காலத்தில் பல தடைகள் ஏற்பட்டது. ஆயினும் இன்று நல்விழி,எழில்விழி, கல்கி மூன்றுபேரும் கறுப்பு பட்டியை பெற்றுள்ளனர். எங்கள் பலநாள் விருப்பம் நிறைவேறியிருக்கு. நல்ல குருவாக ரேமன் சேர் அமைந்தது ஒரு வரப்பிரசாதம்.

மிக பொறுமையாகவும் கண்ணியமாகவும் நடந்து மாணவர்களை வழிநடத்தும் ரேமன் சேருக்கும் நன்றி.

பெண்பிள்ளைகளுக்கு கராத்தே, சிலம்பம் போன்ற தற்காப்பு கலையை பயிற்றுவிப்பது என்பது இன்றைய காலத்தின் தேவையாகவும் உள்ளது என அனந்தி சசிதரன் பதிவிட்டுள்ளார்.

Previous articleவார இறுதி நாட்களில் முழு நேர ஊரடங்கு?
Next articleவவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இப்படி ஒரு அவலம்