யாழில் இளம் குடும்பஸ்தர் மனைவியின் சகோதரி கணவனால் குத்திக் கொலை!!

இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (16) வல்வெட்டித்துறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வல்வெட்டிப் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கிருஷாந்தன் (31)
என்பவரே உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் சகோதரியின் கணவரால் கத்திக் குத்துக்கு இலக்காகிய
நிலையில் ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை
ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரும் வழியில் உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்தை நடத்திய 23 வயதான மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலீஸார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

Previous articleயாழில் உதவி செய்த நபரிடம் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டோடிய நபர்!
Next articleமறுஅறிவித்தல் வரை பள்ளிவாசல் தொழுகைகள் இடைநிறுத்தம்!