மறுஅறிவித்தல் வரை பள்ளிவாசல் தொழுகைகள் இடைநிறுத்தம்!

கொரோனா பரவலை கருத்திற்கொண்டு, பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதற்கு நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு பள்ளிவாசல் தொழுகைகள் தொடர்பில் இலங்கை வக்பு சபை சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

பள்ளிவாசல்களில் தனிமையாக தொழுவதற்கு மாத்திரம் சந்தா்ப்பம் வழங்கப்படுவதுடன் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 25 நபர்களை மட்டுமே பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

இதேவேளை ஜமாஅத் தொழுகை, ஜும்ஆதொழுகை, ஜனாஸாதொழுகை, அல்-குர்ஆன், நிகாஹ் மஜ்லிஸ்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெறும் அனைத்து கூட்டு செயற்பாடுகளையும் மறுஅறிவித்தல் வரை நிறுத்தல் வேண்டும் என வக்பு சபை அறிவித்துள்ளது.

மேலும் தனிமைப்படுத்தப்பட்டதாக /முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும் என வக்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழில் இளம் குடும்பஸ்தர் மனைவியின் சகோதரி கணவனால் குத்திக் கொலை!!
Next articleவவுனியாவில் மேலும் 59 பேருக்கு கொரோனா!