ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது!

சுகாதார அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த தொற்று காலத்தில் நாட்டு மக்களை பலி கொடுத்து அதனூடாக எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டு மக்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றினால், நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது என ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கூறியுள்ளார்.

ஆகவே நாட்டை முடக்குவது தொடர்பில் மாத்திரம் கருத்துரைப்பது அவசியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், படுமோசமான எதிர்க்கட்சியினரே தற்போது செயற்படுகிறார்கள். கொவிட் தாக்கத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்வதை எதிர்தரப்பினர் முதலில் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஜோன்ஸ்டன் பெர்னான்டோ வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே தற்போதைய நெருக்கடியான நிலையை வெற்றிக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.