எல்லையை கடந்து நுழைந்ததால் சுட்டு வீழ்த்த பட்ட ஆப்கான் இராணுவ விமானம் – 84 இராணுவம் சிறை பிடிப்பு

சட்டவிரோதமாக எல்லையை கடந்து நுழைந்ததால் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதாக உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியது உஸ்பெகிஸ்தான்

ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி முன்னேறிய தலிபான்கள், கடைசியாக தலைநகரை நேற்று கைப்பற்றினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின்

கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. தலிபான்கள் காபூல் நகருக்குள் நுழையத் தொடங்கியதும் ஆப்கானிஸ்தான் படைகள் பின்வாங்கத் தொடங்கின. ராணுவ வீரர்கள் பலர் தலைமறைவாகினர்.

இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான் ராணுவ விமானத்தை, உஸ்பெகிஸ்தான் வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது. சர்க்சான்டார்யோ

மாகாணத்தில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இத்தகவலை உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக எல்லையை கடந்து நுழைந்ததால் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதாக உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். ஆனால் விமானத்தில்

எத்தனை பேர் இருந்தனர்? யாராவது உயிர்பிழைத்தார்களா? என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.

இதேபோல் எல்லை தாண்டி வந்து மருத்துவ உதவி கேட்ட ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் 84 பேர் சிறைபிடிக்கப்பட்டதாக உஸ்பெகிஸ்தான் நேற்று கூறியது குறிப்பிடத்தக்கது.