பேய்களுக்கும் வௌவாலுக்கும் ஊரடங்கு போடும் கோத்தா – சமீர குமார பகீர் குற்றசாட்டு

குருடன் யானையை பார்த்ததைப் போன்றே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட்டு வருகின்றார் என்று, ஒன்றிணைந்த பிரஜைகளின் கூட்டமைப்பின் ஒருங்கமைப்பாளர் சமீர குமார தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கழுதைக்கு செல் என்று கூறினால் அது எங்குச் செல்கிறது என்ன செய்கிறது என்று தெரியாது. அவ்வாறான செயற்பாட்டையே ஜனாதிபதி செய்து வருகின்றார்.மக்கள் ஒன்றுக்கூடுவதைத் தடுக்க வேண்டும், பயணங்களைத் தடுக்க வேண்டும், மக்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடி செயற்படுவதைத் தடுக்க வேண்டும் நாட்டை முடக்குகங்கள் என்று, சுகாதார நிபுணர்கள், சுகாதார தொழிற்சங்கங்கள் என்பன ஒன்றிணைந்து கூட்டாகக் கோரிக்கை விடுத்து வருகின்றன.

மேலும் இதனைக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி இதோ நாட்டை முடக்குகிறேன் என்று கூறி, இரவு 10.00 மணிமுதல் அதிகாலை 4.00 மணிவரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். இது குருடன் யானையை பார்த்த காதையாக உள்ளது.அத்தோடு விசேட நிபுணர்கள் கூறியது ஒரு கதை. மக்கள் ஓன்றுகூடும் நேரங்களை தடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள் என்றே சுகாதார நிபுணர்கள் கோரினர். மக்கள் ஆங்காங்கே செல்வதையும் வாகனங்களில் பயணிப்பதையும் ரயில்களில் பயணிப்பதையும் தடுத்து நிறுத்துங்கள் என்றே சுகாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாகவே முடக்கம் ஒன்று தேவை என்று அவர்கள் கோரினர்.

ஆனால் ஜனாதிபதி இரவு முதல் அதிகாலை வரை ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.பேய்கள் நடமாடும் வேளையில் மக்கள் எங்கு செல்ல போகின்றனர்?இரவு 10.00 மணியிலிருந்து அதிகாலை 4.00 மணிவரையில் கொரோனா வைரஸ் பரவுமென்று ஜனாதிபதிக்கு புலனாய்வு பிரிவினர் தகவல்கள் வழங்கியுள்ளனரா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை அரசாங்கம் அறிவித்துள்ள இரவுநேர ஊரடங்கினால் எந்தவித பலனும் இல்லை என தெரிவித்துள்ள அரச தாதிமார் உத்தியோகத்தர் சங்கம் நாடாளாவிய ரீதியில் முடக்கலை அறிவிக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது.மேலும் அரச தாதிமார் உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரட்ணப்பிரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசாங்கம் விஞ்ஞானரீதியிலான முடக்கலை அறிவிப்பதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அனைத்து சுகாதார தொழிற்சங்களும் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அரசாங்கம் விதித்துள்ள ஊரடங்கு பயனற்றது என குறிப்பிட்டுள்ள அவர் அந்த நேரத்தில் எவரும் நடமாடுவதில்லை- இது இரவில் நடமாடும் வெளவால்களிற்கான ஊரடங்கு என சமன் ரட்ணப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அனைத்து மாகாணங்களிலும் பரவுவதன் காரணமாக மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து தடை அர்த்தமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவுவதால் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்தினை கட்டுப்படுத்துவதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்தெரிவித்துள்ளார்.

இதன் முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியல் முடக்கல் காரணமாக எந்த பலனும் ஏற்படப்போவதில்லை,நாங்கள் விஞ்ஞான ரீதியிலான முடக்கலை அறிவித்து சமூகத்தில் உள்ள நோயாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் எனவும் சமன் ரட்ணப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் எங்களால் 70 சதவீதமான நோயாளிகளை கண்டுபிடிக்கமுடியும் என குறிப்பிட்டுள்ள அவர் அதன் பின்னர் மூன்று நாட்களிற்கு நாட்டை திறந்த பின்னர் ஒரு வாரத்திற்கு முடக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இதன் மூலம் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டுசிகிச்சை வழங்க முடியும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.