வவுனியா ஒமந்தை பகுதியில் மயங்கி வீழ்ந்து ஒருவர் திடீர் மரணம்!

வவுனியா ஒமந்தை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஜேசிபி வாகனத்தின் உதவியாளராக கடமையாற்றிய குறித்த நபர் ஒமந்தை பகுதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில் காலை 10 மணியளவில் திடீரென மயங்கி கீழே வீழ்ந்த நிலையில் அங்கிருந்தவர்களின் உதவியடன் ஒமந்தை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போதிலும் அவர் முன்னரே மரணமடைந்துள்ளார் என வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.

தெற்கிழுப்பைக்குளம் பகுதியினை சேர்ந்த 54வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்தவராவார். உயிரிழந்த நபரின் சடலம் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்காக ஒமந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Advertisement