டெல்டா வைரஸின் மூன்று பிறழ்வுகள் இலங்கையில்!

இலங்கையில் வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸின் மூன்று பிறழ்வுகள் இதுவரையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இன்று (17) பாராளுமன்றத்தில் வைத்து கொவிட் நிலமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் SA 222V, SA 701S மற்றும் SA 1078S ஆகிய மரபணுக்களின் மாற்றத்திற்கு உட்பட்ட டெல்டா வைரஸ் வகைகள் இலங்கையில் இனங்காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleகொழும்பின் புறநகர் பகுதியில் பாரிய தீ விபத்து – உயிருக்கு போராடும் 12 பேர்
Next articleஇலங்கையில் தீவிரம் காட்டும் கொரோனா; யாழ் உள்ளிட்ட 31 நகரங்கள் முடக்கம்