5 ஆண்டுகளுக்கு மூடப்படும் ரொறன்ரோவின் முக்கிய பகுதி

ரொறன்ரோவில் குயின் சாலையின் ஒரு பகுதி புதிய சுரங்கப்பாதை நிலையத்தை உருவாக்கும் பணிக்காக ஐந்து வருடங்களுக்கு மூடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை கட்டுமான பணி முன்னெடுக்கும் நிறுவனமானது உறுதி செய்துள்ளது. இதனால் யோங் மற்றும் குயின் தெரு சந்திப்பு பகுதியை பயன்படுத்தும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகலாம் என தெரிய வந்துள்ளது.

குயின் தெரு மூடப்படும் நடவடிக்கையானது 2023 துவக்கத்தில் தொடங்கி சுமார் நான்கரை ஆண்டுகள் தொடர்ந்து 2027 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும், ஒன்ராறியோ சுரங்கப்பாதை கட்டுமானம் தொடர்பில் குயின் தெரு முழுமையாக மூடப்படுவது மிகவும் கடினமான பணியாக இருக்கும் என நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனால் அனைத்து வாகனங்களும் வாடகை டாக்ஸிகளும் குயின் பகுதியிலிருந்து கிழக்கு பே தெரு முதல் யோங் தெருவிற்கும், யோங்கிலிருந்து விக்டோரியா தெருக்களுக்கும் திருப்பி விடப்படும்.