எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முடக்கநிலை அறிவிப்பு வெளியாகலாம்!

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார அமைச்சு பரிந்துரை செய்தால் பொது முடக்கமொன்றை அறிவிப்பதற்குப் பின்வாங்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற வாராந்த ஊடக சந்திப்பு கொழும்பு – நாரஹேண்பிட்டியிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகலில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சரான அமைச்சரவை பேச்சாளர் டளஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார்.

Advertisement

மேலும் கோவிட் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை முடக்கம் செய்யக்கூடாது என்கின்ற பிடிவாதமான தீர்மானத்தில் அரசாங்கம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.