எம்பிலிபிட்டிய பிரதான வீதி விபத்தில் தாய் பலி மகன் வைத்தியசாலையில் !

தனமல்வில – எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் செவனகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நபர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உள்ளார்.

எம்பிலிபிட்டியவில் இருந்து தனமல்வில நோக்கி பயணித்த கெப் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 56 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கெப் வாகனத்தின் ஓட்டுனர் பலத்த காயமடைந்துள்ளார்.

ஹம்பேகமுவ பகுதியை சேர்ந்த தாய் உயிரிழந்துள்ளதுடன் மகனே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் முடக்கநிலை அறிவிப்பு வெளியாகலாம்!
Next articleகடந்த 24 மணித்தியாளங்களில் 171 கொரோனா மரணங்கள்!