யாழில் இளம் ஆசிரியை ஒருவர் தற்கொலை!

யாழில் ஆசிரியை ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட போதிலும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் யாழ்.வடமராட்சி, இமையாணன் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான, தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியை விஜயசங்கர் சாந்தினி (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

Advertisement

குறித்த ஆசிரியை கழுத்தில் சுருட்கிட்ட நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு, உடனடியாக முச்சக்கர வண்டியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.