யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களேயான பெண் குழந்தை உட்ப 2 குழந்தை களுக்கு கொரோனா!

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களேயான பெண் குழந்தை உட்ப 2 குழந்தை களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

அத்துடன் கிளிநொச்சியில் 10 மாதங்களான குழந்தைக்கும், மன்னார் மாவட்டத்தில் 1 வயதும் 10 மாதமான குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களான பெண் குழந்தை ஒன்றுக்கும், 4 வயதான ஆண் குழந்தை ஒன்றுக்கும், கிளிநொச்சி அக்கராயனில் பிறந்து 10 மாதங்களான குழந்தை ஒன்றுக்கும், மன்னார் மாவட்ட வைத்தியசாலை 1 வயதும் 10 மாதமுமான குழந்தை ஒன்றும் தொற்று உறுதியானதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

Advertisement