புதிய பயணக் கட்டுப்பாடுகளின்படி பயணிக்கக்கூடியவர்கள்!

நேற்று புதன்கிழமை முதல் அமுலாக்கப்பட்டுள்ள புதிய பயணக் கட்டுப்பாடுகளுக்கமைய, மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கக்கூடியவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை அமுலில் உள்ள புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளோர்,

சுகாதார சேவைகள்

பொலிஸ் மற்றும் முப்படைகள்

அரச அதிகாரிகள்

முக்கியமான உத்தியோகபூர்வ பயணங்கள்

அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பவர்கள்

அத்தியாவசிய சேவை வழங்குநர்கள்

நெருங்கிய குடும்ப உறுப்பினரின் மரணத்திற்கு செல்பவர்கள் (ஆதாரம் தேவை)

துறைமுகங்களுக்கான பொருட்கள் அல்லது போக்குவரத்து மற்றும் விமான நிலையத்திற்கு செல்பவர்கள் (ஆதாரம் தேவை)

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அத்தியாவசிய சேவைகளுக்கு செல்லும் ஊழியர்களை இயலுமானவரை பணிக்காக அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழ்.மாவட்ட மக்களுக்கு மாவட்ட செயலர் விடுத்துள்ள எச்சரிக்கை!
Next articleகிளிநொச்சியில் பந்தல்காரனின் வீட்டை அடித்து நொருக்கிய காவாலிகள்!