நாளை முதல் புதிய நிவாரணப் பொதி அறிமுகம்!

1,998 ரூபா பெறுமதியுடைய 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி ஒன்றை சதொச ஊடாக விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இந்த பொதி விநியோகிக்கப்படவுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

1998 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குபவர்களுக்கு குறித்த நிவாரணப் பொதி வீட்டுக்கே கொண்டு வந்து தரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், 2600 ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 20 அத்தியாவசியப்பொருட்களே இந்த நிவாரணப் பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Previous articleகொரோனாவுக்கு பலியான இரு பாடசாலை மாணவர்கள்!
Next articleயாழ்.மாவட்ட செயலகத்தில் மோட்டார் திணைக்கள பிரிவு தற்காலிகமாக முடக்கம்!