ஆப்கானின் இளம் கால்பந்து வீரரும் விமானத்திலிருந்து வீழ்ந்து மரணம்!

சமூக ஊடகங்களில் அஞ்சலி பகிர்வு அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தான் தேசிய உதை பந்தாட்ட இளையோர் அணியின் வீரர் என்ற தகவல் தற்போது வெளியாகியி ருக்கிறது. காபூல் விமான நிலையத்தில் கடந்த திங்களன்று மீட்பு விமானம் ஒன்றில் தொற்றி ஏறிப் பயணிக்க முற்பட்ட சிலர் உயிரிழந்தமை தெரிந்ததே.

விமானத் தின் கீழே சக்கரங்கள் இடையே-தரை யிறக்கும் கியர் பகுதியில்- ஏறி ஒளி ந்து பயணிக்க முற்பட்ட மூவர் விமானம் மேலே கிளம்பிப் பறந்தபோது உடல் சிதறுண்டு தரையில் வீழ்ந்தனர் என்று கூறப்படுகிறது. விமானத்தில் இருந்து உடல்கள் கீழே வீழ்கின்ற வீடியோக் காட்சிகள் சமூக ஊடகத் தளங்களில் வெளியாகி இருந் தன. அவ்வாறு வானிலிருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில் ஒருவரே இளம் வீரர் ஷாகி அன்வாரி (Zaki Anwari) என் பது நண்பர்களால் உறுதிப்படுத்தப்பட் டுள்ளது.ஆப்கானிஸ்தான் விளையாட்டு இயக்குநரகமும்(Sports Directorate) இந்தச் செய்தியை பின்னர் உறுதிப்படுத்தியது.

ஆப்கானிஸ்தானின் தேசிய உதைபந்தா ட்ட வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் வீரர் அன்வாரியின் ஈடுசெய்ய முடியாத இழப்புக்குத் தங்கள் துயரைப் பகிர்ந்து வருகின்றனர். அமெரிக்காவின் சி-17(USAF Boeing C-17) இராணுவப் போக்குவரத்து விமானம் காபூல் சர்வதேச வான் தளத்தில் இருந்து புறப்பட்ட சமயம் பல நூற்றுக்கணக்கான ஆப்கானிய இளைஞர்கள்அந்தவிமானத் தில் ஏற்றிக்கொள்ள முண்டியடித்தனர். இடம் கிடைக்காத பலர் விமானம் ஓடத் தொடங்கியதும் அதன் கீழ் பகுதியில் தொற்றி ஏறிக்கொண்டனர்.அந்த விமா னத்தில் அதன் கொள்ளளவை விடவும் ஐந்து மடங்கு அதிகமாக – சுமார் 640 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. விமானத்தின் சக்கரப் பகுதியில் சடலம் ஒன்று சிக்குண்டமை தெரியவந்ததை அடுத்து பயண வழியில் அந்த விமானம் பாதுகாப்புக் கருதி அவசரமாக கட்டாரில் தரையிறங்கிச் சென்றது. வீரர் அன்வாரி யின் உடல் எச்சங்களே சக்கரப்பகுதிக் குள் சிக்குண்டிருந்தன என்று சில செய்தி ஊடகங்கள் தெரித்தன. விமானத்தின் வெளிப்பகுதியில் ஏறிப் பயணம் செய்த சிலர் உயிரிழந்தமை தொடர்பாக விசேட விசாரணை ஒன்றை நடத்தவுள்ளதாக அமெரிக்க விமானப் படை தெரிவித்துள்ளது. 19 வயதான ஷாகி அன்வாரி ஆப்கானி ஸ்தானை அமெரிக்கப்படைகள் கைப் பற்றிய பின்னர் பிறந்து வளர்ந்த புதிய தலைமுறை வாலிபர் ஆவார். அவரது வயதை ஒத்த ஏனைய பலரைப் போன்றே தலிபான் இயக்கத்தின் கொடுமைகளை தனது பெற்றோர் மூலமாகவே தெரிந்து வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது. காபூலில் உள்ள பிரபல பிரெஞ்சு மொழி கல்லூரி ஒன்றின் மாணவராகிய ஷாகி அன்வாரி ஒரு சமூக ஊடக நட்சத்திரமா கவும் விளங்கினார்.தனது கடைசிப் பதிவு ஒன்றில் அவர் பின்வருமாறு எழுதி உள்ளார் என்ற தகவலை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. “உங்கள் வாழ்க்கைக்கு வர்ணம் தீட்டு பவர் நீங்களே… தூரிகையைப் பிறர் கையில் கொடுத்து விடாதீர்கள்…”

Previous articleசிறுவர்கள் மத்தியில் கொரோனாத் தொற்று தீவிரம்!
Next articleஇலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்!