ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்வோர் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை!

ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்வோர் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்றிரவு 10.00 மணி முதல் 30ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

இக்காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள், ஆடைத் தொழில்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் மருந்தகங்களின் செயற்பாடுகள் அனுமதிக்கப்படும் என்றும் அவர்குறிப்பிட்டார்.

அந்தவகையில் தொழிலுக்குச் செல்பவர்கள் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை என்றும் வீதித்தடைகளில் உள்ள பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடம் உங்களது அடையாள அட்டையைக் காட்டி அனுமதி பெற முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Previous articleதிருமணத்திற்காக இலங்கை வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்; தாயும் மகனும் கொரோனாவுக்கு பலி!
Next articleயாழ்.மாவட்டத்திலும் எரிபொருளுக்காக முண்டியடிக்கும் மக்கள்!